திரு பனையூர் மு. பாபு சமூக ஆர்வலராகவும் ,தொழிலதிபராகவும் தன் வாழ்க்கையை பெரும் இன்னல்களுடனும் வறுமை.யுடனும்  ஆரம்பித்து பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதனை முழுவடிவமாக்க ஏரம்மாள் அம்மாள் அறக்கட்டளையை www.erammalammalarakatalai.org.துவக்கி எண்ணிலடங்கா உதவிகளை உண்மையாகவே தேவைப்படுவோருக்கு தொடர்ச்சியாக செய்துவருகிறார் குறிப்பாக ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவன் என்ன செய்வான் என்பதை உணர்ந்து இல்லாதவனுக்கு உணவளித்தல், அதே போல் இருக்க இடம் மற்றும் கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்வதும் பெரும் சமூக பணியே என்பதை உணர்ந்து அதையும் செய்துவருகிறார், அதோடு இளமைக் காலத்தில் கல்வியை புறக்கணித்தவன் எதிர்கால வாழ்வை இழந்தவன் ஆகிறான். என்பதை உணர்ந்ததால் மாணவ மாணவிகள் கல்விகற்பதற்கு பெரும்தொண்டாற்றிவருகிறார், அதோடு தொகுதியில் ஏழைகள்  நிறைந்த பகுதிகளில் மருத்துவ வசதிகளுக்காக அரும்பாடுபட்டுவருவதோடு அவர்களுக்கான சுகாதார வசதியையும் தன் முயற்சியால் உறுதிபடுத்தி வருகிறார் பனையூர்  மு.பாபு  , 

பிறப்பு…

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .இப்படியாக 

ஒருவரின் பிறப்பு என்பது மிக முக்கியமான ஒன்று அந்த வகையில் பின்னாளில் இவ்வளவு சாதனைகளையும் சாமானியனுக்கும்  ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெரும் அரணாக இருக்கப்போகும் மு.பாபு அவர்கள் பிறந்தது 01-05-77 –ல் 

இளமை…

வாழ்க்கையை கனவுகளுடன் நகர்த்த வேண்டிய பருவத்தில் பசி தாகங்களுடன் அன்றாட வாழ்க்கைத்தேவைக்கே  வழியில்லாமல் இருந்தால் அந்த வாழ்க்கையும் அவனது பருவமும் நரகம்தான்,வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளமைப்பருவம்  எல்லோருக்கும் வருவது தான் இயற்கை, அந்தப்பருவத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் வறுமையில் வாடுவது மிகக்கொடுமையானது, ஆனால் பிறப்பில் இருந்தே  இந்த கொடுமை அரங்கேறினால் அதன் தாக்கம் சொல்லிமாளாது, ஆம் 1-5-77-ல்  பிறந்த பனையூர் மு.பாபுவின் அப்பா எட்டுமாததிற்குள்ளேயே இறந்தார் வறுமையின் கோரப்பயணித்தில் 8-ம் வருப்பு வரை மட்டுமே பள்ளி கல்வி.யை வெட்டுவான்கனியில் உள்ள ST.JOSEPH பள்ளியில் அறிந்தார், .,

தொழில்...

ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். இதிலிருந்து மீண்டு வருவது என்பது அவரவர் மனநிலையை பொருத்த விஷயம். தன்னம்பிக்கை உடைய மனிதன் பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு விடுகிறான்.

ஒருவன் தன்மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். நம்பிக்கை என்கிற எரிபொருள் உள்ளத்தில் இருக்கும்வரை நம்மை இயக்கி கொண்டே இருக்கும். நம்பிக்கையோடு இயங்கினால்தான் எந்த துறையிலும் சாதனை படைக்க முடியும். என்பதை மெய்பிக்கும் வகையில் வறுமையினால்  ,தர்பூசனி கிர்ணிப்பழம் விற்பனையில் ஆரம்பித்த தொழில் முயற்சி,  ராமாபுரத்தில் முதல் முதலாக கேபிள் டிவி தொழிலுக்கான கதவை திறந்தது அதில் கேபிள் பழுது, இணைப்பு வழங்கும் வேலை என துவங்கிய தொழில்ப்பயணம் தந்த ஆக்கமும் ஊக்கமும் அத்தொழிலை ECR ஈஞ்சம்பாக்கத்தில் அறிமுகம் செய்யவைத்தது, அப்போதுதான் மக்களிடையே  SUN TV பாபு என்கிற பெயருடன் அங்கிகாரத்தை வழங்கியது, அந்த நம்பிக்கையில்,தொழில் வளர்ச்சிப்பெற்று சாய்ராம் கேபிள் விஷன் ஆரம்பமானது, அந்த வெற்றிப்பயணத்தை தொடர்ந்து பல்துறை தொழிலதிபராக உயர்ந்து  தடைகளும், தோல்விகளும் புதிய சக்தி பிறப்பதற்கான ஊன்றுகோள் என்பதை உலகிறகு உணர்த்தியவர் பனையூர் மு.பாபு .

சமூகப்பணி...

பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்னும் எண்ணத்துடனே வாழ்ந்து வந்த மு,பாபு அவர்கள் . பிறருக்கு உதவி செய்வதன் மூலம் அவர்கள் பெறும் இன்பத்தில் உள்ள சந்தோஷம் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடுயில்லை, என்பதனை பல்வேறு தளங்களில் பதிவுசெய்தும் வருகிறார், பனையூர் மு. பாபு, அதோடு தனது தாயார் எரம்மாள் அம்மாள் பெயரில்  அறக்கட்டளை ஆரம்பித்து இலவச திருமணமண்டபம் ,இலவச மருத்துவ முகாம்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்விக்கட்டணம் ,முதியோர் ஆதரவற்றோருக்கு மாதம் 3000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை,தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு வேட்டி புடவை .அரிசி, பருப்பு,மளிகை சாமான்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாது  புயல் மழை வெள்ளம் பாதிப்பு போன்ற நேரங்களில் இலவச உணவு உறைவிடம் அளித்து மனிதநேயமாந்தராக வலம் வருபவர் , இப்படியாக, பெண்களுக்கு தையற்பயிற்சி  எண்ணற்ற இளைஞர்களுக்கு அவரின் நிறுவனங்களிலேயே வேலை வாய்ப்பு என அடுத்த தலைமுறையின் கனவையும் நினைவாக்க பாடுபடுபவர்  அது மட்டுமல்லாது வாழும் காலத்தின் தேவைகள் குறித்து  மட்டுமே சிந்திக்காமல் தொகுதியில் யாரேனும்.இறந்து விட்டால் ஈமசடங்கிற்கு 1000 ரூபாய் உதவித்தொகை ,இலவச பிரேதபெட்டி ,இலவச அமரர் ஊர்தி ,உள்ளிட்டவைகளையும் வழங்கி உணர்வுகளுக்கும் உயிரூட்டி சமூகப்பணியை தனது தலையாய கடமையாக செய்துவருகிரார் .

Translate »